எரிபொருள் விலை உயர்வு : உயர்கிறது விலைவாசி

755

டீசல் விலை அதிகரிப்பின் காரணமாக லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனால் உணவு பொருட்கள், மருந்துகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இதில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது வரலாறு காணத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் லாரி தொழில் நலிவடைய தொடங்கியுள்ளது.

ஓரிடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு சரக்கை அனுப்பி வைக்க ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வாடகையை வியாபாரிகளும் தொழில் நிறுவனங்களும் வழங்கி வருவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சரக்கு கட்டணத்தை உயர்த்திட முடிவு செய்து தமிழகத்தில் லாரி சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளனத்தின் தலைவர் பாலச்சந்திரன், லாரி சரக்கு கட்டண வாடகையை 25 சதவீதம் வரை அதிகரிப்பதாக, கடந்த 3 நாட்களுக்கு முன் அறிவித்தார்.

அதன்படி நேற்று முதல் மாநிலம் முழுவதும் லாரி சரக்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement