“பேட்ட” – இது தான் தலைவர் படம் – விண்டேஜ் ரஜினியை ரசித்த ரசிகர்கள்

488

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஒரு பெயர் போதும். 69 வயதிலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். ஒரு சில வருடமாக க்ளாஸ் ரஜினியை பார்த்து வந்த நமக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட மூலம் மாஸ் ரஜினியை காட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம், பொங்கலையொட்டி இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா என இரண்டு நாயகிகள். இவர்கள் தவிர விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திகி, பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இது வரை ரஜினியை இயக்கியவர்கள் வெரும் இயக்குனர்களே ஆனால் முதன் முறையாக ஒரு ரஜினி ரசிகர் ரஜினியை வைத்து இயக்கிய முதல் படம் என்ற பெருமைக்குறியது இந்த பேட்ட.

முன்னதாக அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து பட்டயைகிளப்பியது. படத்தின் டீசர் மற்றும் டிரைலரும் வந்த சற்று நேரத்திலேயே டிரெண்டிங்கில் வந்து வைராலாகியது. பேட்ட படத்தைப் பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இன்று வெளியானது. முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் ரஜினி நடிப்பை மெய்சிலிர்த்து பார்த்ததாக சமூகவலைதளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

“இது தான் நம்ம தலைவர் படம். ஆனந்தக் கண்ணீர் வருகிறது. கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றிகள் என பேட்ட படத்தின் இடைவேளை வரை பார்த்த ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றோரு ரசிகர் ஒருவர் “இந்த பத்தாண்டுகளில் வந்த ரஜினியின் மிகச் சிறந்த படம் இது தான் என்றும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் ரஜினியிசம் உச்சத்தில் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of