இணையத்தில் “பேட்ட” – அதிர்ச்சியில் படக் குழு

405

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம், பொங்கலையொட்டி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா என இரண்டு நாயகிகள். இவர்கள் தவிர விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தை உயர் நீதிமன்றம் இணையத்தில் வெளியிட தடையிட்டிருந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் தனது வலைதளத்தில் பேட்ட முழு படத்தையும் வெளியிட்டது. இதேபோன்று முன்னதாக சர்கார், மற்றும் டு பாய்ண்ட் ஓ (2.0) படமும் வெளியான அன்றே முழு படமும் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால் பட குழுவினர்கள், பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.