பேட்ட விஸ்வாசம் – 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி

788

பேட்ட விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருகின்றன. வரும் 10–ந்தேதி அன்று வெளியாகும் இந்த இரு படத்திற்கும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்தன.

தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் இந்த இரு படங்களுடன் போட்டியிடாமல் சில படங்கள் ரிலீஸ் ஆகும் தேதியை தள்ளி வைத்து விட்டன.

மேலும், பொங்கல் பண்டிகைக்கு அதிக காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து வரும் 10 முதல் 20 தேதி வரை தினமும் 5 காட்சிகள் படங்கள் திரையிடப்படுகின்றன. வழக்கமாக 4 காட்சிகள் தான் திரையிடப்படும்.

ரசிகர்கள் மத்தியில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் பெரிம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement