திருமணத்திற்கு சென்ற ராமராஜன்..! அடித்தது ஜாக்பாட்..! மகிழ்ச்சியின் உச்சத்தில் குடும்பம்..!

2026

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ராமசந்திரன் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக, உறவினர் ராமராஜன் என்பவர் வந்திருக்கிறார். 30 வயது இருக்கும் இவர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

இந்த கல்யாணத்திற்கு தேவி என்ற இன்னொரு வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வந்திருக்கிறார். இவர்கள் திருமண நிகழ்ச்சியில் வந்ததில் இருந்து, தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

இதனைப்பார்த்த மற்ற உறவினர்கள், அந்த பெண்ணையே, ராமராஜனுக்கு திருமணம் செய்து விடலாம் என்று எண்ணி, பெண் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்ததையடுத்து, ராமசந்திரன் திருமணம் முடிந்த அடுத்த நாளே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால், இந்த தம்பதிகளுக்கு, இன்னொருவரின் திருமணத்தில் தான் தங்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட உறவினர்கள் கூறினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of