டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலும் பரவுகிறது – பினராயி விஜயன்

328

கேரளாவில் வைரஸ் தொற்றுடன், டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலும் பரவுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதேசமயம் கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்ல் வேகமாக பரவி வருவதாக வேதனை தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாமல் பிடிபடுபவர்கள் குறித்த பெயர், விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், 2வது முறை பிடிபட்டால் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

கேரளாவில் தற்போதைக்கு கல்வி நிறுவனங்களை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், தற்போது ஆன்லைன் வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதை, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Advertisement