“யாரையும் பாதுகாக்க மாட்டோம்..” – பினராயி விஜயன் அதிரடி..!

350

தங்கக் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தங்கக் கடத்தல் வழக்கில், தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், என்.ஐ.ஏ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் விசாரணை நடத்த முடிவு செய்தாலும், அதற்கும் முழு அனுமதி அளிக்கப்படும் என கூறினார். இந்தப் பணம் பயங்கரவாத நடவடிக்கைளுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளதாக பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

ஸ்வப்னா சுரேஷிடம் தொடர்பிலிருந்தது தெரியவந்ததையடுத்து, முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து சிவசங்கர் நீக்கப்பட்டதாகவும், ஐ.டி. துறையில் அந்தப் பெண் எப்படி பணியில் அமர்த்தப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of