பினராயி எதிர்ப்பது மோடியையா? அதானியையா?

393

சில நாட்களுக்கு முன்பு கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையம் உட்பட நான்கு சர்வதேச விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு நிர்வாகிக்கும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றார்.
கேரளா மாநில தொழில் மேம்பாட்டு கழகம், ஒரு பயணிக்கு 135 ரூபாய் செலவில், நிர்வாக பணிகளை மேற்கொள்வதாக ஒப்பந்த புள்ளி அளித்துள்ளபோது, 168 ரூபாய் கேட்டுள்ள அதானி நிறுவனத்துக்கு ஒப்பந்த பணி தந்தது ஏன்? என, பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பினராயி விஜயன் அதானி குழுமத்துக்கு எதிராக குரல் எழுப்பியது, பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து தான் என இடது ஜனநாயக முன்னணி வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

Advertisement