நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

509

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் இன்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செழுதூரைச் சேர்ந்த கந்தவேல், முருகானந்தம், தமிழ்ச்செல்வன் ஆகிய மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆறுகாட்டுத்துறை அருகே மீனவர்கள் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் கந்தவேல், முருகானந்தம், தமிழ்ச்செல்வன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் மீனவர் தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார், இதையடுத்து உயிர்பிழைத்தால் போதும் என மீனவர்கள் கரை திரும்பினர். இந்நிலையில் இன்று, கோடியங்கரை அருகே நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் , நாகை மீனவர்கள் மீது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர்.

இதில் கண்ணன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ் உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பரித்து சென்றுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of