நீட் தேர்வு தேவையில்லை என தமிழக அரசு சொல்லவில்லை! மத்திய அரசு விளக்கத்தால் பெரும் சர்ச்சை!

1495

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய பாஜக அரசிடம் வலியுறுத்தப்படும் என மக்களவை தேர்தல் வாக்குறுதியாக அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் பாஜக தலைவர்களின் முடிவோ வேறு மாதிரியாக உள்ளது தற்போது நிரூபணமாகியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நீட் தேர்வு குறித்து மத்திய அரசின் நிலையை விளக்கியுள்ளார்.

நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை என்றும் நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது, அதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

Advertisement