சென்னையில் இருந்து விமானத்தை கடத்தி, கொழும்புவை அழிக்க திட்டம்

610

விடுதலை புலிகள் சென்னையில் இருந்து விமானத்தை கடத்தி, கொழும்புவை தாக்கி அழிக்க திட்டமிட்டிருந்ததாக இலங்கை அதிபர் சிறிசேனா
இலங்கையில் ராணுவத்துக்கும். விடுதலை புலிகளுக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடைபெற்றது.

இதில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்திபால சிறிசேனா, வெளிநாடு வாழ் இலங்கை மக்களை சந்தித்து பேசினார்.

அப்போது இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, முன்னாள் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ தளபதியும் ஆகியோர் நாட்டில் இல்லை என்று தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலுக்கு பயந்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறினார்.

மேலும் விடுதலை புலிகள் சென்னையில் இருந்து விமானத்தை கடத்தி, கொழும்புவை தாக்கி அழிக்க திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

Advertisement