பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்

508

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 2019-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசின் அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கை தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்றும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of