பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்தால் மெட்ரோ டிக்கெட் Free..! – அசத்தும் நிர்வாகம்..!

380

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை ஒப்படைத்துவிட்டு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யும் முறையை இத்தாலி அரசு கொண்டுவந்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான புதிய முயற்சியில் இத்தாலி அரசு இறங்கியுள்ளது.

அதன் ஒருபகுதியாக பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை செலுத்திவிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணத்தை இலவசமாக பெறலாம்.

முதற்கட்டமாக இந்த திட்டம் ரோம் நகரில் உள்ள சான் ஜியோவானி மெட்ரோ நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள mycicero என்ற செயலியின் பார்கோடை ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்திற்குள் செலுத்த வேண்டும்.

அப்படி செலுத்தும்பட்சத்தில் அவர்களுடைய மெட்ரோ பயண அட்டையில் பயணத்துக்கான பணம் ஏறிவிடும். இத்தாலி நாட்டின் சுற்றுச்சூழல் துறை மற்றும் போக்குவரத்துத்துறை இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of