தடையை மீறினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம்…

133
plastic-ban

ஆண்டு துவக்கத்திலிருந்தே நெகிழி பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இந்த தடைக்கு மக்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

இந்த தடையின் காரணமாக வாழையிலை போன்ற இயற்கை பொருட்களின் வியாபாரமும், துணி பை போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்னமும் முழுமையாக நெகிழி பயன்பாடு குறையாதபட்சத்தில் தமிழக அரசு புதிதாக நெகிழி பயன்பாட்டிற்கு தடையோடு கூடிய அபராதமும் விதித்துள்ளது.

இதன் அடிப்படையில் நெகிழி பயன்பாட்டிற்கு முதலில் ரூ. 25000 அபராதமும், மீண்டும் பயன்படுத்தும் நிலையில் ரூ. 50000மும் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.