தோப்புக்கரணம் போட்டால் பிளாட் ஃபார்ம் டிக்கெட் இலவசம்..! அசத்தும் ரயில்வே துறை..!

514

தோப்புக்கரணம் என்பது இந்தியாவின் சொத்து. ஆனால், அந்த சொத்தை மற்ற நாடுகள் தான் அதிகமாக பின்பற்றுகின்றனர். இதற்கு சூப்பர் பிரைன் யோகா என்றும் அவர்கள் பெயர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தினமும் காலை இந்த தோப்புக்கரணத்தை போடும்போது, உடலின் ரத்த ஓட்டம் சீராகும், மூளை அதி விரைவாக செயல்படும். இதுமட்டுமின்றி பல்வேறு பயன்கள் இந்த தோப்புக்கரணத்தை போடும்போது மனித உடலுக்கு கிடைக்கின்றன.

இதுகுறித்து இன்றைய இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை இலவசமாக அளிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ஏற்பாடு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இதுதொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.