பயனர் ரகசியங்களை காக்க முடியாமல் திணறும் கூகுள்

543

கூகுள் அங்காடியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் அழகு திருத்தும் செயலிகள், வலைதள விளம்பரங்களின் வழியாக பிஷிங் அட்டாக் (Phishing Attack) செய்யப்பட்டு, பயனர்களின் தகவல்களை திருடப்படுகின்றனர்.

இதனால் கூகுள் நிறுவனம் இதுவரை 29 செயலிகளை (app) தனது செயலி அங்காடியிலிருந்து (playstore) முற்றிலுமாக அகற்றிவிட்டது.

இந்த ஆண்ட்ராய்டு செயலிகள், பயனர்களால் பல கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பதிவிறக்க எண்ணிக்கைகள் ஆசியாவில் இருந்து தான் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்தியாவில் அதிக அளவில் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. என அமெரிக்க அடிப்படையிலான சைபர் பாதுகாப்பு நிறுவனமான டிரெண்ட் மைக்ரோஸில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

நம்முடைய தகவல்களை திருடும் விளம்பரங்கள்

பயனர்கள் தங்கள் தொடுதிரை அலைபேசியை (Smart Phone) திறக்கும்போது, அச்செயலிகள் முழு திரையில் விளம்பரங்களைப் பயனருக்கு வழங்குகின்றன, அதில் பல விளம்பரங்களை நாம் பார்க்கும் போது நம்முடைய தகவல்களை திருடும் வாய்ப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று பல மோசடி உள்ளடக்கம், ஆபாசம் உள்ளடக்கம் கொண்ட விளம்பரங்களை பாப்-அப் செய்து தகவல்களை திருடியுள்ளனர் செயலி வடிவமைப்பாளர்கள்.

கூகுள் நிறுவனம் நீக்கிய செயலிகள்

1. புரோ கேமரா புயூட்டி
2. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ
3. ஈமோஜி கேமரா
4. ஆர்டிஸ்டிக் எபெக்ட் பில்ட்டர்
5. ஆர்ட் எடிட்டர்
6. பியூட்டி கேமரா
7. செல்பி கேமரா புரோ
8. ஹாரிஜரின் பியூட்டி கேமரா
9. சூப்பர் கேமரா
10. ஆர்ட் எபெக்ட் பார் போட்டோ
11. ஆவ்சம் கார்ட்டூன் ஆர்ட்
12. ஆர்ட் பில்ட்டர் போட்டோ
13. ஆர்ட் பில்ட்டர் போட்டோ எபெக்ட்
14. கார்ட்டூன் எபெக்ட்
15. ஆர்ட் எபெக்ட்
16. போட்டோ எடிட்டர்
17. வால்பேப்பெர்ஸ் எச்.டி
18. மேஜிக் ஆர்ட் பில்ட்டர் போட்டோ எடிட்டர்
19. பிள் ஆர்ட் போட்டோ எடிட்டர்
20. ஆர்ட் பிளிப் போட்டோ எடிட்டிங்
21. ஆர்ட் பில்ட்டர்
22. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ
23. பிரிஸ்மா போட்டோ எபெக்ட்
24. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ பில்ட்டர்
25. ஆர்ட் பில்ட்டர் போட்டோ எடிட்டர்
26. பிக்ஷர்
27. ஆர்ட் எபெக்ட்
28. போட்டோ ஆர்ட் எபெக்ட்
29 கார்ட்டூன் போட்டோ பில்ட்டர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of