பப்ஜி மோகம்.. தண்ணீருக்கு பதில் கெமிக்கல்… இளைஞர்க்கு நேர்ந்த விபரீதம்

314

நம் பயன்படுத்தும் மொபைல் போனில் அதிக விளையாட்டுகள் வந்துவிட்டது. அதில் சிறுவர் முதல் பெரியவர் வரை அடிமையாக இருக்கிறார்கள். சிலர் இது தான் வேலையாக கொண்டிருக்கிறார்கள்.ஒரு வருடத்தில் மொபைல் விளையாட்டில் குறைந்தது 20க்கு மேலான நபர்கள் இறப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். அதே போல் வருடத்துக்கு வருடம் ஒரு கேம் மக்கள் மத்தியில் வைரலாகுவது வழக்கம் அதே போல் உயிர் போவதும் வழக்கம் தான்.

இந்நிலையில் தற்போது வைரலாகி கொண்டு விளையாடிக்கும் பப்ஜி விளையாட்டில் அதிக உயிர் போய் கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடத்தில் இந்த விளையாட்டால் குடும்பத்தில் பிரச்சனை மற்றும் கொலை போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணமாய் உள்ளது.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் சவுராப் யாதவ் தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் குவாலியில் இருந்து ஆக்ராவுக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார்.

சவுராவ் நண்பர் சந்தோஷ் நகை தொழில் செய்பவர் என்பதால் அவர் பையில் நகை சுத்தம் செய்யும் கெமிக்கலை வைத்திருந்தார். ரயிலில் பப்ஜி விளையாடி கொண்டிருந்த சவுராப்புக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால் பையில் இருந்த கெமிக்கலை எடுத்து குடித்துள்ளார்.

உடனே மயக்கமைடந்த சவுராப் சரிந்து விழுந்தார். அடுத்த நிலையத்திற்கு செல்வதற்கு முன் சவுராப் இறந்து விட்டாதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சவுராப் நண்பர் சந்தோஷ் கூறியது: சவுராப் ஆர்வமாக பப்ஜி விளையாடி கொண்டிருந்தான் அவன் விளையாட்டு ஆர்வத்தில் பையில் இருந்த கேமிக்கலை எடுத்து குடித்துவிட்டான் என தெரிவித்துள்ளார்.