பப்ஜி விளையாடினால் குற்றம்! இதுவரை 19 பேர் கைது!

210

மைதானத்திற்கு சென்று விளையாடிய காலம் மலை ஏறிப்போய், தற்போது நுனி விரலில் 100 கேம்கள் என ஸ்மார்ட் போன்களில் வந்து விட்டது.

தற்போதைய ட்ரெண்டிங் கேமான பப்ஜியை, பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி வருகிறார்கள். இந்த விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட குஜராத் அரசு, பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டுமென சுற்றறிக்கை விடுத்தது.

அதன்படி ராஜ்கோட்டில் மார்ச் 9 முதல் முதல் ஏப்ரல் 30 வரை பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுவதாகவும், யாரேனும் பப்ஜி விளையாட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் சட்ட விதி 188ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த இரண்டு நாட்களில் பப்ஜி விளையாடியதாக 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 19 பேரை ராஜ்கோட் போலீசார் கைது செய்துள்ளனர்.