பிளாஸ்டிக் பைகளுக்கு தடை – அரசாணையை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

248

மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஜனவரி 1 முதல் தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை பிறப்பித்தது.இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பன்னாட்டு நிறுவனங்களையும் மொத்த விற்பனை நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாணை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆந்திரா மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அரசாணையை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் உறுதிசெய்துள்ளன எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது என அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, பொருட்கள் அடைத்துவைக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக்குக்கு விலக்கு அளித்தது ஏற்க முடியாது என்று கருத்து கூறிய நீதிபதிகள், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி.