ஊரடங்கிற்கு நாம் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் – சகாயம் IAS

410

ஊரடங்கு உத்தரவுக்கு நாம் ஒவ்வொரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என, மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் சகாயம் IAS கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மக்கள் பாதை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில், சுமார் 60 நபர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  சகாயம் IAS வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பாதை இயக்கத்தின் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள், அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருவதாக தெரிவித்தார்.

ஊரடங்கு நேரத்திலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும், மிகச் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருப்பதாக அவர் கூறினார். ஊரடங்கு உத்தரவு நமக்கானது என ஒவ்வொரு குடிமகனும் கருத வேண்டும் என்றும், சகாயம் IAS கேட்டுக்கொண்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of