அவர்களை வெறும் புத்தக புழுவாக மாற்றிவிடாதீர்கள்! | Perarasu

306

5 மற்றும் 8ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது, பல தடைகளுக்கு பிறகு இந்த பொதுத்தேர்வு தற்போது நடைபெறவுள்ளது. இருப்பினும் இந்த தேர்வுக்கு இன்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பொதுத்தேர்வு குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பேரரசு.

சிறுவயதில் மனதில் பதியும் விஷயங்களையே பசுமரத்தாணி போல் என்று உதாரணம் சொல்வார்கள்!
சொந்தம், பந்தம், பண்பாடு, கலாச்சாரம் , நாட்டுப்பற்று இவை எல்லாமே சிறுவயதில் பதியும் பொழுதுதான் அது உணர்வோடும், உயிரோடும் ஊறிப்போகும் . ஐந்தாம்,எட்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வினால் இது எல்லாமே மனதில் பதியாமல், வெறும் கல்வி மட்டும் பதிந்துவிடும். இதனால் வெளியுலகம் தெரியாமல் நாளைய தலைமுறை வளரும் ஆபத்து இருக்கிது.

கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாணவர்களின் கல்வி மேன்பாட்டை மட்டும் பார்க்கிறீர்கள், நாங்கள் அவர்களின் வாழ்க்கை மேன்பாட்டையும் பார்க்கிறோம் ! எதிர்கால சந்ததியினரை கிணற்று தவளையாக்கிவிடாதீர்கள்!, இந்த உலகில் போராடித்தான் வாழ வேண்டிருக்கிறது. அதற்கு நாம் சீறும் பாம்பாக இருக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் அவர்களை வெறும் புத்தக புழுவாக மாற்றிவிடாதீர்கள்!
மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களே தயவு செய்து இந்த இரு பொதுத் தேர்வுகளையும் மறு பரிசீலனை செய்யுங்கள் !

பள்ளிகளின் சட்டதிட்டங்களை இன்னும் முறையாக நெறிப்படுத்தலாம் ! ஐந்தாம் , எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வினை அரசு தவிர்ப்பது நல்லது ! முழுக்க முழுக்க படிப்பிலையே பிள்ளைப்பருவம் சிறார்களுக்கு கழிந்துவிடக்கூடாது, வாழ்க்கை சுமை இல்லாமல் பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் பருவம் அது,
மாணவர்கள் கல்வியைக் கற்றுக்கொண்டு வாழ்க்கையை கற்க தவறிவிடக்கூடாது ! ஏற்கனவே வளரும் தலைமுறைக்கு பாச பிணைப்பும், உறவு நெருக்கமும் மிகவும் குறைந்து கொண்டுவருகிறது, இந்த இரண்டு பொதுத்தேர்வுகளும் இன்னும் சிறார்களின் வாழ்க்கையை முழுமையாக முழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது.

சொந்த பந்த நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளாமல் முழுக்க முழுக்க படிப்பே வாழ்க்கை என நீட் தேர்வு மாணவர்களை ஆக்டோபஸ் மாதிரி பிடித்துக்கொண்டு இருக்கிறது இதில் இளமை பருவம் அடமானம்
வைக்கப்பட்டு விட்டது! பிள்ளைப் பருவத்தையும் சிறுவர்கள் இழக்காமல் இருக்க இந்த இரு பொதுத்தேர்வையும் அரசு தவிர்க்க வேண்டும்! என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of