இப்படி பட்ட எண்ணத்திலிருந்து விலகி இருங்கள் – பிரதமர் மோடி

503

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார்.

குறிப்பாக, வி.ஐ.பி. கலாசாரத்தை நீங்கள் துறக்க வேண்டும். விமான நிலையம் போன்ற இடங்களில் மக்களோடு மக்களாக வரிசையாக அனைத்து காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு காலையில் எழுந்தவுடன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தே தீரவேண்டும் என்ற மனப்பாங்கு உள்ளது. பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும், தொலைக்காட்சிகளில் முகம் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விலகி இருங்கள் என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of