கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி – ஜெயக்குமார்

489

 

கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொடநாடு விவகாரம் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் கற்பனையே என தெரிவித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, வேண்டுமென்றே திட்டமிட்டு முதலமைச்சருக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தெகல்கா முன்னாள் ஆசிரியரின் குற்றச்சாட்களை சட்டப்படி சந்திப்போம் என்றும், அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க நடைபெறும் சூழ்ச்சிகள் எடுபடாது என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தி.மு.க ஆட்சியில் மலர் என்ற பெண்ணை ஸ்டாலின் கொலை செய்ததாக கூறப்படும் வழக்கை, தி.மு.க மூடி மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of