12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..! அட்டவணை வெளியீடு..! முக்கிய செய்தி..!

539
Exam

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மே 3-ல் மொழிப்பாடமும், மே 5-ல் ஆங்கிலமும், மே 7-ல் கணினி அறிவியல் தேர்வும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 11-ல் இயற்பியல், பொருளாதாரம் தேர்வுகளும், மே 17-ல் கணிதம், விலங்கியல் தேர்வுகளும் நடைபெற உள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.

மே 19-ல் உயிரியல், வரலாறு தேர்வுகளும், மே 21-ல் வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளும் நடைபெற இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி முழுவதும் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement