பிளஸ் 2 தேர்விற்கான முடிவுகள் நாளை வெளியீடு, இணையதள விபரங்கள் வெளியாகின

317

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி முடிவடைந்த பிளஸ் 2 தேர்விற்கான முடிவுகள் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது. இந்த தேர்வினை மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்கின்ற இணையதளங்களில் அறிந்துக் கொள்ளலாம்.

ஏப்ரல் 20 முதல் 26-ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of