பிரதமருக்கும், அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியவில்லை ?

730

பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, உலக அளவில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நமது பொருளதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி ஏன் 5-வது இடத்தில் இருப்பதாக சொல்லி வருகிறார் என்பது புரியவிலலை.

பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாதது தான் அதற்கு காரணம். அவருக்கு மட்டுல்ல நிதிஅமைச்சர் அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரிய வில்லை. அன்னிய செலவானி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மதிப்பு தொடர்ந்து மாறக்கூடியது. அதனை அடிப்படையாக கொண்டு பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறாகும்.

தற்போதைய நிலையில் அந்த விகிதத்தை கொண்டு கணக்கிட்டால் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் அல்ல 7-வது இடத்தில் இருக்கிறது.

உண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக கொண்டே நாட்டின் பொருளதாரம் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால் இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தை வகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of