
இந்தியாவை போன்று, பாகிஸ்தான் நாட்டிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அந்நாட்டில் அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
அதாவது, பாலியல் குற்றவாளிகளுக்கு, ரசாயணங்களை பயன்படுத்தி, ஆண்மை இழக்கும் தண்டனையை கொடுப்பதற்கான சட்டத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி, பாலியல் தொடர்பான வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கான சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்துள்ளதால், கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.