அனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

436

கொரோனா விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு தரப்பினர் உடன், ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் உடன், கொரோனா தொடர்பாக, வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாட உள்ளார்.

அப்போது கொரோனாவை எதிர்கொள்வது மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of