தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி…, கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு?

718

திருப்பூரில் நாளை நடைபெறும் அரசு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் நாளை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை பிற்பகல் 2:30 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைகின்றார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெருமாநல்லூர் செல்லும் அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடியும் சந்தித்து பேசும் போது பாரதிய ஜனதா மற்றும் அதிமுக இடையே நாடாளுமன்ற கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி முடிவு எடுக்கப்படும் என்றார். பிரதமர் வருகையை ஒட்டி 3,000-க்கும் அதிகமான போலீசார் திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து பாரதிய ஜனதா தலைவர்களும், பிரதமர் பாதுகாப்பு அலுவலர்களும் திருப்பூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of