‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’- ஐ.நா.சபையில் பிரதமர் மோடி

884

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

எங்கள் நாட்டை சேர்ந்த மிக பெரிய புலவரான கணியன் பூங்குன்றனார் நாம் அனைத்து இடங்களுக்கும் அனைவருக்க்ம் சொந்தமானவர்கள் என்னும் பொருள்பட ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளார்.

இதை மேற்கோளாக வைத்து ஐ.நா.சபையின் முக்கிய நோக்கங்களான நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளையும் கலாசாரங்களையும் பலப்படுத்தும் வகையில் இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளது. பிளவுப்பட்ட உலகம் என்பது யாருக்கும் ஏற்பு இல்லாத ஒன்றாகும்.

எல்லைகளுக்குள் எங்களை சுருக்கிக் கொள்ள நாங்கள் எப்போதும் விரும்பியது கிடையாது என குறிப்பிட்டார்.