“மோடிக்கு ஒரு கிளாப் போடுங்கப்பா..” கடற்கரையில் செய்த அசத்தல் செயல்..!

745

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சென்னை மாமல்லபுரத்தில் சந்திக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு அலங்கார விளக்குகளால், மாமல்லபுரம் அலங்கரிக்கப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது. இதனிடையே நேற்று 1 அரை மணியளவில் சீன அதிபர் சென்னைக்கு வருகை தந்து, அன்று மாலை 5 மணியளவில் பிரதமரை மாமல்லபுரத்தில் சந்தித்தார்.

அப்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து, காலை கடற்கரைக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு கடற்கரையில் இருந்த குப்பைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் நடைபயிற்சி செய்து கொண்டே, வெறும் கைகளால் குப்பைகளை அகற்றினார். சுமார் அரை மணி நேரம் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement