இன்று உ.பி செல்கிறார் பிரதமர் மோடி

453

உத்திர பிரதேசம் மற்றும் டெல்லி இடையே 296 கிலோ மீட்டர் தொலைவிற்கு பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலைக்கான திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெருகிறது. மேலும், சித்ரகூடம் மற்றும் பிரயாக்ராஜ் நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்கிறது.

இந்நிலையில், பல்வேறு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று உத்திர பிரதேசம் செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement