இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு வாழ்த்துகள் சொன்ன மோடி..! காரணம் என்ன தெரியுமா..?

3474

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமான காரணத்திற்கு வெளியே வருபவர்கள் கூட, முகக்கவசம் அணிந்துக்கொண்டு தான் வரவேண்டும் என்று சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இந்திய கிரி;க்கெட் கவுன்சில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் வீரர்கள் முதல் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரை இடம்பெற்று, பொதுமக்களை முகக்கவசம் அணிவது தொடர்பாக வலியுறுத்துகின்றனர்.

மேலும், டீம் மாஸ்க் ஃபோர்ஸ் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இணைந்திடுங்கள் என்றும் கூறியிருந்தனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி, முகக்கவசம் அணிவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும், இன்றைய முக்கியமான டாஸ்க்குகளில் ஒன்று, டீம் மாஸ்க் ஃபோர்ஸில் இணைவதும் தான் என்று கூறி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Advertisement