கிளாம்பாக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

206

சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் அரசு திட்டங்கள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு-கரூர்-திருச்சி மற்றும் சேலம்-கரூர்-திண்டுக்கல் மின்மயமாக்கல் ரயில் பாதை, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திரவ எரிவாயு முனையம், தெற்கு ரெயில்வே சார்பில் ரூ.321.64 கோடி செலவில் செயல்படுத்தப்படும் 2 திட்டங்கள் உள்பட 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுதவிர சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை காணொலி காட்சி மூலம் மோடி திறந்து வைத்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of