தேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுடன் இன்று உரையாடும் பிரதமர்

225

தேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை உரையாற்ற உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் பொதுத்தேர்வின் போது மாணவர்கள் பதற்றமாக காணப்படுவது வழக்கம். அதனால், அவர்கள் தேர்வை சரியாக எழுத முடியாமல் போகிறது.

மாணவர்கள் இடையே உள்ள  அச்சத்தை போக்கும் வகையில், பிரதமர் மோடி பள்ளி  மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு நடக்க இருப்பதை அடுத்து, பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த 16-ம் தேதி மாட்டு பொங்கல் அன்று நடத்த திட்டமிடப்பட்டது.

16ம் தேதி பொங்கல் பண்டிகை. அதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும். அப்படி இருக்க  மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வர முடியும் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதனையடுத்து பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16-ந் தேதி மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாட இருந்த நிகழ்ச்சி, 20-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளி இறுதித்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி, இன்று காலை 11 மணிக்கு உரையாட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை பிரதமர் வழங்குவார் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of