குடியரசுத் தலைவரை இன்று திடீரென சந்தித்த மோடி..! காரணம் என்ன..?

196

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று திடீரென சந்தித்த பிரதமர் மோடி  தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பிரதமர் மோடி நேற்று முன்தினம் விமானத்தில் பறந்தபடி லடாக்கின் லே பகுதியை ஆய்வு செய்து பின்னர், ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, கொரோன தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி, குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் பயணம் குறித்தும், தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி பேசியதாக குடியரசுத்தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of