“தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கணும்..” ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தல்..!

242

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச 4 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் ராஜபக்சவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதை ஏற்ற ராஜபக்ச, பின்னர் டெல்லி ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியைதை செலுத்தினார்.

இதனையடுத்து, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என தெரிவித்தார். மேலும், தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ-விடம் வலியுறுத்தியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

இவரைத்தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு, பொருளாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படும் என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of