பயணத்திட்ட பட்டியலை வெளியிட்டது வெளியுறவுத்துறை அமைச்சகம் !

586

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க 350 இடங்களில் வெற்றி பெற்று விரைவில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. நரேந்திர மோடி அவர்கள் இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டத்தை தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி பிரதமர் மோடி அவர்கள் வருகின்ற ஜூன் மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை கிர்கிஸ்தானில் நாட்டில் நடைபெறவிருக்கும் SCO மாநாட்டில் பங்கேற்கிறார்.

அதன் தொடர்ச்சியாக ஜூன் 28 மற்றும் 29ம் தேதி ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் மோடி அவர்கள் பங்கேற்க உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of