லால் பகதூர் சாஸ்திரியின் 114-வது பிறந்த நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி

631

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 114-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து விஜய்காட்டில் இருக்கும் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். லால் பகதூர் சாஸ்திரி தைரியமானவர், திறமையுள்ள தலைவர் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, நாட்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் புதுடெல்லியிலுள்ள ராஜ்காட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

மேலும் இன்று நாம் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறோம். அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றுள்ளோம் எனக் கூறியுள்ளார்.