பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து

278

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

modi-pongal-wishesதமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமுதாயத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் பொங்கல் திருநாள் மேலும் கொண்டுவர மனமார பிரார்த்திக்கிறேன். தேசத்துக்கு உணவளிக்க கடுமையாக உழைத்திடும் விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.