ரெய்னாவின் செயலை பாராட்டிய பிரதமர்..!

279

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ரூ.52 லட்சம் நிதியுதவி வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டரில், ‘ அற்புதமான 50 சுரேஷ் ரெய்னா’ என பாராட்டியுள்ளார்.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது.

இதனால், விளையாட்டு போட்டிகள் முடங்கின. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர் சச்சின் (50 லட்சம்) பாட்மின்டன் வீராங்கனை சிந்து(ரூ.10 லட்சம்) பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி (ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரிசி) முன்னாள் வீரர்கள் இர்பான், யுசுப் பதான்( 4 ஆயிரம் மாஸ்க்) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா( 6 மாத சம்பளம்) தடகள வீராங்கனை ஹிமா தாஸ்(ஒரு மாத சம்பளம்) உள்ளிட்ட இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் நிவாரண நிதி வழங்கினர்.

தற்போது இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் இணைந்துள்ளார்.இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கொரோனாவை தோற்கடிக்க நாம் உதவி செய்ய வேண்டிய நேரம் இது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிவாரண நிதியாக ரூ.52 லட்சம் வழங்குகிறேன்( பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சம், உ.பி., முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சம்) வழங்க உள்ளேன். நீங்களும் தயவு செய்து உதவுங்கள். இவ்வாறு அந்த பதிவில் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of