டிரம்ப்பின் இந்திய பயணம் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் – மோடி

251

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணம், இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்தநிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

அவருக்கு மறக்கமுடியாக வரவேற்பை அளிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணம், இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும், இந்தியா-அமெரிக்கா இடையேயான நெருக்கமான உறவு இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, உலகிற்கே நன்மையை விளைவிக்கும் என்றும் அவர், கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of