இதனால் யாரும் பயனடைய முடியாது – மோடி

1893

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது பிரம்மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பட்டேல் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநிலமீதது போல் பிறிதில்லையே என்ற மகாகவி பாரதியார் கவிதையை மேற்கொள்காட்டி பேசினார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியது என்வும் கூறினார். புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்பு படையினர் தியாகம் செய்ததில் சிலர் வருத்தப்படவில்லை என்பதை நாடு ஒருபோதும் மறக்காது என்றார்.

தேசத்தின் நலனுக்காக இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொண்டார். பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Advertisement