இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

346

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 129 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 300க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற போது குண்டு வெடித்தது.கொச்சிக்கடை, அந்தோனியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடித்தது. ஷாங்கிரி லா, சின்னமான் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டு வெடித்தது.

இலங்கையில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்தகொடிய தருணத்தில் இலங்கை மக்கள் மன தைரியத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பு எதிரொலியாக நாளை (22-ம் தேதி) நாளை மறுநாள் (23-ம் தேதி) இலங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.  – 947779-03082, 94112-422788, 94112-422789.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-இலங்கையில் நடந்த கொடூர சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இது குறித்து பெரும் கவலைஅடைந்தேன். இந்த துயரமான தருணத்தில் இலங்கை மக்களுக்கு ஆறுதல் கூறுகிறேன்.

பயங்கராவதத்திற்கு இந்தப் பிராந்ததியத்தில் இடமில்லை. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இலங்கை மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of