சென்னைக்கு வந்ததும் மோடி செய்த முதல் செயல்..! தமிழில் போட்ட அசத்தல் டுவீட்..!

461

சீனா நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங்க் இன்று சென்னை மாமல்லபுரத்திற்கு வருகை தந்து, மோடியை சந்திக்க இருக்கிறார். இவரது வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் போட்டுள்ளார்.

அதில்,

“சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.