அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்? பிரதமர் மோடி டுவீட்…!

268

டெல்லி : பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, பல்லுயிர்ப் பெருக்கம் என்ற கருப்பொருளை முன்வைத்து உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை குறிப்பிட்டு, ட்விட்டரில் பிரதமர் மோடி ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

பூமியின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம். நம்மோடு பூமியைப் பகிர்ந்து கொண்டுள்ள விலங்குகளும், தாவரங்களும் செழித்து வளர, நம்மால் இயன்ற அனைத்தையும் சேர்ந்து செய்வோம்.

அடுத்து வரும் தலைமுறையினருக்கு இன்னும் சிறந்த பூமியை நாம் விட்டுச் செல்வோம் என்றும் பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of