இந்த செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.. பிரதமர் டுவீட்..

791

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், இதுவரை 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கான தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஆரோக்கியா சேது என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டுவீட் செய்த பிரதமர் நநேரந்திர மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில், இந்த செயலி முக்கியமான படி என்றும், இது பல்வேறு முக்கியமான தகவல்களை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், இதன் தரம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று தெரிவித்த அவர், அந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of