காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

433

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனையடுத்து, ராகுல் காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் பிறந்த நாளில், கடந்த 5 மாதங்களாக இந்தியர்களை ஈர்க்கும் விதமான அவரது செயல்பாடுகளை நினைவு கூர்ந்துள்ளது என்று பதிவிடப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, டுவிட்டரில், #HappyBirthdayRahulGandhi, Rahul Gandhi Ji, Rahulji என்ற ஹேஸ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of