”ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறான்” – பிரதமர் மோடி வாழ்த்து..!

349

சந்திராயன் – 2 GSLV ராக்கெட் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ தலைவர் முன்னிலையில் சரியாக 2.43 மணிக்கு புறப்பட்ட GSLV ராக்கெட், 46 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 6 அல்லது 7 ஆம் தேதி நிலவில் நிலைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது;
 

”எங்கள் புகழ்பெற்ற வரலாற்றின் ஆண்டுகளில் பொறிக்கப்படும் சிறப்பு தருணங்கள்!சந்திரயான் 2 இன் வெளியீடு நமது விஞ்ஞானிகளின் வலிமையையும், விஞ்ஞானத்தின் புதிய எல்லைகளை அளவிட 130 கோடி இந்தியர்களின் உறுதியையும் விளக்குகிறது. ஒவ்வொரு இந்தியனும் இன்று மிகுந்த பெருமைப்படுகிறான்! “ என குறிப்பிட்டுள்ளார்.