குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

562

வீடுகள், வாகனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை சேலத்தில் பிரதமர் மோடி கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் 129 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 65 புவியியல் பகுதிகளில் காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்க்கான விழா சேலத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல்முறையாக தொடங்கப்படும் இந்த திட்டத்திற்கு கோவை, சேலம் மாவட்டங்களில் இந்தியன் ஆயில் நிறுவனம் உரிமம் பெற்று உள்ளது. மேலும் சேலம், கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் இயற்கை எரிவாயுவை கொச்சி மற்றும் சென்னை எண்ணூரில் இருந்து குழாய் மற்றும் வாகனங்கள் மூலம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயு வீடுகள், தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பயன்பாட்டிற்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

மேலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும்போது பெட்ரோலை விட வாகனங்களுக்கு 60 சதவீதமும், டீசலை விட 45 சதவீதமும் எல்பிஜி கேஸை விட 40% செலவு குறையும். பெட்ரோல் டீசல் எல்பிஜியை விட இது பாதுகாப்பானது. மேலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபடுவதை பன்மடங்கு குறைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of